ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அறந்தாங்கி,
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தர்ம தங்கவேல், மாவட்ட துணைத்தலைவர் சுந்தரம், வட்டார தலைவர் முத்தழகு உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல காரையூரில், வட்டாரத்தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.சுப்புராம், நிர்வாகிகள் அப்பாஸ், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story