மழைநீர் சேகரிப்பு பணிகளை அதிகாரி ஆய்வு


மழைநீர் சேகரிப்பு பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 15 Sept 2019 4:00 AM IST (Updated: 15 Sept 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்ந்துபோன ஆழ்துளை கிணற்றின் அருகே மழைநீர் சேகரிப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடக்கிறது.

கிரு‌‌ஷ்ணராயபுரம்,

உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரெங்கபாளையம் பகுதியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்ந்துபோன ஆழ்துளை கிணற்றின் அருகே மழைநீர் சேகரிப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை மண்டல உதவி இயக்குனர் குருராஜன் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story