மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா திரளானவர்கள் பங்கேற்பு
மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
உடன்குடி,
மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
திருச்சிலுவை ஆலயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடந்த விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.
10-ம் நாளான நேற்று முன்தினம் காலையில் திருப்பலி, மாலையில் மலையாள திருப்பலி நடந்தது. தொடர்ந்து திருச்சி மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில், மாலை ஆராதனை நடந்தது. பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் மறையுரையாற்றினார். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா திருப்பலி
விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலையில் தமிழிலும், மலையாளத்திலும் திருப்பலிகள் நடந்தன. காலையில் ஆலயத்தை சுற்றிலும் ஐந்து திருக்காய சபையினரின் பவனியை தொடர்ந்து திருவிழா திருப்பலி நடந்தது.மாலையில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை ஆசீர், கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை லெரின் டிரோஸ், உதவி பங்குத்தந்தை பிரபு, ஆன்மீக தந்தை தெயோபிலஸ் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story