மாவட்ட செய்திகள்

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகள் பங்கேற்பு + "||" + Bicycle Competition Student-Students Participation in Anna's Birthday

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகள் பங்கேற்பு

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார்.
கரூர்,

கரூரில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 75 மாணவ, மாணவிகளும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 120 மாணவ, மாணவிகளும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 60 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு மற்றும் அவசர கால வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தோவாளை முதல் ஆரல்வாய்மொழி வரை பா.ஜ.க.வினர் பாதயாத்திரை பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
தோவாளை முதல் ஆரல்வாய்மொழி வரை பா.ஜ.க.வினர் பாதயாத்திரை மேற்கொண்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
2. அம்மையப்பன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட நீதிபதி பங்கேற்பு
அம்மையப்பன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி கலைமதி கலந்து கொண்டார்.
3. ஆடுதுறையில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு
ஆடுதுறையில் 240 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டார்.
4. கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தி.மு.க.வினர் முற்றுகை விவசாயிகள் பங்கேற்பு
கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
5. நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்ககோரி நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.