மாவட்ட செய்திகள்

திருமருகலில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Officials in action to prepare sandbags to repair rivers in Tirumala

திருமருகலில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் அதிகாரிகள் நடவடிக்கை

திருமருகலில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் அதிகாரிகள் நடவடிக்கை
திருமருகலில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையனாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வரும் போதும், மழை காலங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மணல் மூட்டைகள் தயார்

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க பொதுப்பணித்துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட உயர் அதிகாரிகளின் அறிவுரையின்படி நன்னிலம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி மேற்பார்வையில், திருமருகல் உதவி பொறியாளர்கள் ரெத்தினவேல், சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருமருகல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. நீதிபதி தஹில்ரமானி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு அனுமதி
சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி தஹில்ரமானி மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் சி.பி.ஐ. அனுமதி பெற்றது.
2. தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை வைத்து பிடித்த 3 டன் மீன்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை வைத்து பிடித்த 3 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. கனடா நாடாளுமன்றம் கலைப்பு; பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நடவடிக்கை
கனடா நாடாளுமன்றத்தினை கலைத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உத்தரவிட்டு உள்ளார்.
4. நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள்- ஓட்டலுக்கு சீல் வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள் மற்றும் ஓட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
5. கவர்னரின் செயலாளர் பங்கேற்க இருந்த சிறப்பு கூட்டம் ரத்து பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பால் திடீர் நடவடிக்கை
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கவர்னரின் செயலாளர் பங்கேற்க இருந்த சிறப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.