முன்விரோதம் காரணமாக பசுமாட்டை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு வலைவீச்சு
முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பசுமாட்டை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் தெற்குகாட்டை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி திரிபுரசுந்தரி (வயது35). இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று திரிபுரசுந்தரிக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த கணேசன் (27), அய்யப்பன் (35) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் பசுமாட்டின் இடது காலில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து திரிபுரசுந்தரி முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story