அம்பை, கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்


அம்பை, கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:00 AM IST (Updated: 15 Sept 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

அம்பை, கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார்.

அம்பை, 

அம்பை, கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார்.

கலெக்டர் ஷில்பா ஆய்வு

நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று அம்பை பகுதிக்கு சென்றார். அங்கு அம்பை- கல்லிடைக்குறிச்சி ஆற்றுப்பாலம், இசக்கியம்மன் கோவில் பின்புறம் நடைபெற்று வந்த தூய்மை பணிகளை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்தார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

அதனை தொடர்ந்து கலெக்டர் ஷில்பா கூறுகையில், கடந்த 2 நாட்களாக எந்திரங்கள் உதவியுடனும், மனித சக்திகளை கொண்டும் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்த நதியை பாதுகாத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தூய்மை பணிகள் நடைபெறுகிறது என்றார். நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி மண்டல இயக்குனர் காளிமுத்து, நகரப்பஞ்சாயத்துகளின் மண்டல இயக்குனர் மாஹின் அபுபக்கர், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், அம்பை தாசில்தார் வெங்கடேஷ், அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் சக்திநாதன், சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், செஞ்சிலுவை சங்க கிளை செயலர் சலீம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story