சயான் ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி


சயான் ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி
x
தினத்தந்தி 15 Sept 2019 3:30 AM IST (Updated: 15 Sept 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

சயான் ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையால்வெடிகுண்டு பீதி ஏற்பட்டுபரபரப்புஉண்டானது.

மும்பை,

சயான் ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையால்வெடிகுண்டு பீதி ஏற்பட்டுபரபரப்புஉண்டானது.

கேட்பாரற்று கிடந்த பை

மும்பை சயான் ரெயில் நிலையம் அருகே உள்ள நடைபாதையில் நேற்று மதியம் பெரிய தோள் பை ஒன்று அனாதையாக கிடந்தது. இதில் அந்த பையில் வெடிகுண்டு இருப்பதாக பீதி கிளம்பியது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு வந்தனர். மேலும் பொதுமக்கள் பை அருகே வராத வகையில் தடுப்பு வேலி வைத்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் அந்த பையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த பையில் துணிமணிகள் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த பள்ளியின் கல்வி சான்றிதழ்கள் தான் இருந்தது. வெடிகுண்டுகள் ஏதும் இல்லை. இதன்பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் அந்த பையை விட்டு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் நேற்று சயான் ரெயில் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story