காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
தமிழகத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர அட்டைகள் முறைப்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சீபுரம்,
இதில், அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக விளம்பர பேனர்கள் வைத்தால், அதற்கு காரணமானவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள், விளம்பர அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறு அனுமதியின்றி பேனர்கள் அமைக்கும் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
இதில், அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக விளம்பர பேனர்கள் வைத்தால், அதற்கு காரணமானவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள், விளம்பர அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறு அனுமதியின்றி பேனர்கள் அமைக்கும் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story