மாவட்ட செய்திகள்

பிறந்தநாளையொட்டி அண்ணா சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை + "||" + A statue of Anna on birthday, courtesy of the wreath for the portrait

பிறந்தநாளையொட்டி அண்ணா சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

பிறந்தநாளையொட்டி அண்ணா சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ் தலைமையில் அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகர செயலாளர் முருகேசன், இளைஞர்அணி தலைவர் இளயராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை அணிவித்து மரியாதை

இதேபோல் திருமானூரில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வடிவழகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமானூரில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தனபால் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் லதாபாலு, மாவட்ட இலக்கிய அணி சக்திவேல், ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் கஸ்தூரி கருணாகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
தென்காசி மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சமீரன் நேற்று தொடங்கி வைத்தார்.
2. பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு.
3. கந்தசஷ்டி விழா நிறைவு: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
கந்தசஷ்டி விழா நிறைவடைந்ததை தொடர்ந்து முருகன்கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
4. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.
5. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை