மாவட்ட செய்திகள்

தி.மு.க. இளைஞர் அணிக்கு வலுசேர்த்திட பாடுபட வேண்டும் - பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பேச்சு + "||" + The DMK should strive to strengthen the youth team

தி.மு.க. இளைஞர் அணிக்கு வலுசேர்த்திட பாடுபட வேண்டும் - பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பேச்சு

தி.மு.க. இளைஞர் அணிக்கு வலுசேர்த்திட பாடுபட வேண்டும் - பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பேச்சு
மாவட்டத்தில் 40 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து தி.மு.க. இளைஞரணியை வலுப்படுத்த வேண்டும் என திருப்பத்தூரில் கே.ஆர்.பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. பேசினார்.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் முகாம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரிகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.


இதில் எம்.எல்.ஏ., பேசியதாவது:- தி.மு.க. என்ற இயக்கத்தை அண்ணா உருவாக்கினார். கலைஞர் வழி நடத்தி சென்றார். அதன் பிறகு தளபதி ஸ்டாலின் இன்று தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிக்கு தலைமை வகித்து இயக்கத்தை மேலும் வலுப்படுத்திட உள்ளார்.

நமது மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இளைஞர் அணிக்கு புதிதாக 40 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து இயக்கத்தை வலுப்படுத்திட வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் இறங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், கல்லல் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் சந்திரன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆனந்த், நகரச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேதுபதிராசு, பொற்கோ, பிரசாந்த், பிரதீப்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் கான்முகமது, உதயசண்முகம் உள்பட ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.