மோடி பிறந்தநாளையொட்டி மாரத்தான் ஓட்டப்பந்தயம்


மோடி பிறந்தநாளையொட்டி மாரத்தான் ஓட்டப்பந்தயம்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நமோ பாசறையின் சார்பில் அறந்தாங்கியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

அறந்தாங்கி,

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நமோ பாசறையின் சார்பில் அறந்தாங்கியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை, பாரதீய ஜனதா கட்சியின் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கிய ஓட்டப்பந்தயம் பட்டுக்கோட்டை சாலை, அண்ணா சிலை, கட்டுமாவடி சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரதிதாசன் தெரு, பெரியகடைவீதி சாலை, கோட்டை சாலை, புதுக்கோட்டை சாலை வழியாக சென்று வ.உ.சி. திடலில் நிறைவுபெற்றது. இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியை முன்னிட்டு அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story