மாவட்ட செய்திகள்

கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை + "||" + Investigation by footage recorded by the surveillance camera on the robber who stole Undiali in the temple

கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை

கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை
களியக்காவிளை அருகே கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.
களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மூவாட்டுகோணம் பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வழிபாடு நடத்த வருவார்கள். அதேபோல நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வந்த போது அங்குள்ள உண்டியலை காணவில்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அதனை தொடர்ந்து பக்தர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே நிர்வாகிகள் விரைந்து வந்து பார்த்த போது, உண்டியல் திருடு போனது தெரிய வந்தது.

வலைவீச்சு

இதனையடுத்து நிர்வாகிகளும், பளுகல் போலீசாரும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். கேமராவில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து உண்டியலை அலேக்காக தூக்கிச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1½ லட்சம், பொருட்கள் திருட்டு
திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள், தீபாவளி புத்தாடைகளையும் அள்ளிச்சென்றனர்.
2. நூதன முறையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில், ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நூதன முறையில் 12 பவுன் நகைகள் திருட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. மணப்பாறையில் துணிகர சம்பவம்: தலைமை ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகைகள் திருட்டு
மணப்பாறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது. பாம்பு பயத்தால் பக்கத்து வீட்டில் தங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
4. காவிரி ஆற்றில் இருந்து திருடி குவிக்கப்பட்ட மணல் அகற்றம் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
பூம்புகார் அருகே காவிரி ஆற்றில் இருந்து திருடி குவிக்கப்பட்ட மணல் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.
5. டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு பூட்டை அறுத்து மர்ம நபர்கள் கைவரிசை
ஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை அறுத்து 36 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...