மாவட்ட செய்திகள்

மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு + "||" + The woman who died due to lack of money to pay her tuition, died without treatment

மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
குத்தாலம் அருகே மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கொடிமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி சுமதி(வயது40). சம்பவத்தன்று சுமதியின் மகள் அவரிடம் கல்வி கட்டணம் செலுத்த பணம் கேட்டார். அப்போது பணம் இல்லாததால் சுமதி தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுமதி அவரது வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.


பரிதாப சாவு

இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் கொடிமங்கலம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு மற்றும் தனியார் பஸ்களில் துறையூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூல்
துறையூரில் இருந்து திருச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.