தூத்துக்குடி அருகே அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் 17 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அந்த 2 மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அந்த 2 மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவிலுக்கு...
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தென்றல்நகரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கட்டுமான பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெகதீசுவரி(வயது 49). இவர் நேற்று முன்தினம் இரவு ஆதிபராசக்திநகரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். இவர் சக்திநகர் 1-வது தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
நகை பறிப்பு
அவர்கள் திடீரென ஜெகதீசுவரியை வழிமறித்து நகையை பறிக்க முயன்றனர். ஆனால் ஜெகதீசுவரி நகைகளை பிடித்து கொண்டு திருடன்...திருடன் என சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளை காட்டி மிரட்டினர். தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி சங்கிலி, 4 பவுன் மற்றொரு தங்க சங்கிலி ஆக மொத்தமாக 17 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.
2 நபர்களுக்கு வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து நகைகளை வழிப்பறி செய்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற அந்த 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story