திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 995 வழக்குகளுக்கு தீர்வு
திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 995 வழக்குகளுக்கு தீர்வு செய்யப்பட்டன.
திருவாரூர்,
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரச தீர்வு செய்திட திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி பக்கிரிசாமி, தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வீரணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபாலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
995 வழக்குகளுக்கு தீர்வு
சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவானம்சம் உள்பட 3,575 வழக்குகள் நீதிபதிகள் முன்னிலையில் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 995 வழக்குகளுக்கு தீர்வு செய்யப்பட்டன. மேலும் ரூ.1 கோடியே 1 லட்சத்து 44 ஆயிரம் இழப்பீடு வழங்கிட உத்தரவிடப்பட்டது. அப்போது சட்ட உதவிகள் பெறுவது குறித்து கையேடு வெளியிடப்பட்டது.

Related Tags :
Next Story