தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அண்ணா பிறந்த நாள் விழா


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அண்ணா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 15 Sep 2019 10:15 PM GMT (Updated: 15 Sep 2019 9:29 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரூர், 

தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பல்வேறு கட்சிகள் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அரூரில் அ.தி. மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு சம்பத்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அரசு வக்கீல் பசுபதி, நிர்வாகிகள் செண்பகம் சந்தோஷ், திருவேங்கடம், தீர்த்தகிரி, சாமிகண்ணு மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரூர் நகர தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரூர் கச்சேரி மேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர் முல்லைசெழியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் முகமதுஅலி, லயோலா ராஜசேகர், கோட்டீஸ்வரன், செந்தாமரை கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று அரூரில் அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் ஏகநாதன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈட்டியம்பட்டியில் அ.ம.மு.க. கிளை செயலாளர் இளையராஜா தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம் நகர அ.தி. மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பென்னாகரத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கூட்டுறவு வங்கி தலைவர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள்விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை அவர் வழங்கினார். ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் நாராயணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் நாராயணன், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் நகர துணை செயலாளர் மதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான், முன்னாள் ஓசூர் நகர்மன்ற உறுப்பினர்கள் அசோகா, சுரேஷ்பாபு, புஷ்பாஹரி, நந்தகுமார் மற்றும் சங்கர் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் நகர தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிசெல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, நிர்வாகிகள் பரிதா நவாப், வெங்கட்டப்பன், கடலரசு மூர்த்தி, ராஜா, கனல் சுப்பிரமணி, ஆறுமுகம், சூர்யா வஜீர், டேம் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். முன்னதாக பாலக்கோடு கூட்ரோட்டில் இருந்து அண்ணாவின் உருவப்படத்தை ஏந்தியபடி மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் வைத்து கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தென்னரசு, காத்தவராயன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வெங்கட்ராமன், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கத்தலைவர் சுந்தரேசன், நாகோஜனஅள்ளி பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா கார்த்திக், ஜெயக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை துணை தலைவர் ஆறுமுகம் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல தி.மு.க. சார்பில் காவேரிப்பட்டணத்தில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணியம், நகர செயலாளர் பாபு ஆகியோர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ராஜன், செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வம், பேரூராட்சி முன்னாள் தலைவர் விவேகானந்தன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் விஸ்வபாரதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜே.கே., ஒன்றிய மாணவரணி பொறுப்பாளர் நாகராஜ், பொன் திருமால், சாபுயுதீன், ஹரி நாராயணன் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

கெலமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ராயக்கோட்டை 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், நகர பேரவை குச்சிகுமார், ஊராட்சி செயலாளர்கள் புருசப்பன், சாக்கப்பன், மாரிமுத்து, கூட்டுறவு வங்கித்தலைவர் சுப்பிரமணி, மாணவரணி நாராயணன் ஒன்றிய இளைஞர் அணி முருகன், சண்முகம், நிர்வாகிகள் கோவிந்தன், பட்டாபி, மணி, கிருஷ்ணமூர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய தலைவர் சீனிவாசன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தர்மபுரி மண்டல செயலாளர் திராவிட மணி, மாவட்ட தலைவர் மதிமணியன், அமைப்பாளர் கதிரவன் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் இளைஞரணி தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி துணைத்தலைவர் புகழேந்தி, ஒன்றிய அமைப்பாளர் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story