தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தமிழக அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். கல்லூரி கிளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதே போன்று தூத்துக்குடி அருகே உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க துணை செயலாளர் மாரிசெல்வம் தலைமையிலும், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தலைமையிலும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story