திருத்துறைப்பூண்டியில், குளத்தை சொந்த செலவில் தூர்வாரும் பொதுமக்கள்


திருத்துறைப்பூண்டியில், குளத்தை சொந்த செலவில் தூர்வாரும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:15 PM GMT (Updated: 16 Sep 2019 8:27 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் பொதுமக்கள் சொந்த செலவில் குளத்தை தூர்வாரி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகே உள்ள பள்ளிவாசல் தெருவில் அகரம்மனைக்கால், ஆட்டூர்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தாளங்குளத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த குளம் சமீப காலமாக தூர்வாரப்படாமல் கருவை மரங்கள் வளர்ந்து புதர்போல் காட்சி அளித்தது. இதனால் அந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது.

இதையடுத்து பள்ளிவாசல் தெரு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வந்து தாங்கள் சொந்த செலவிலேயே குளத்தை தூர்வார முடிவு செய்தனர். இதை தொடர்ந்து குளம் தூர்வாரும் பணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. தூர்வாரும் பணியை வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) வெங்கடாச்சலம், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் , நீர் நிலை பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தூர்வாரும் பணியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் ஆட்டூர் ரோடு வாய்க்காலும் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டன.

Next Story