தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில், ரெயிலில் அடிபட்டு 2 பெண்கள் பலி


தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில், ரெயிலில் அடிபட்டு 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 17 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த அய்யம்பேட்டைக்கும்- பசுபதிகோவிலுக்கும் இடையே 60 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இவர் அந்த வழியாக சென்ற மயிலாடுதுறை பயணிகள் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.

இதே போல் தஞ்சையை அடுத்த அயனாபுரம் ரெயில் நிலையத்தில் அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து 35 வயது மதிக்கத்தக்க பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியதாஸ், ராஜூ, ஏட்டுகள் அருணாசலம், குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story