புவிசார் குறியீடு கிடைத்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு; உற்பத்தியும் இரு மடங்கானது


புவிசார் குறியீடு கிடைத்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு; உற்பத்தியும் இரு மடங்கானது
x
தினத்தந்தி 16 Sep 2019 11:30 PM GMT (Updated: 16 Sep 2019 9:18 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் விலை தற்போது உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் விற்பனையும் அதிகரித்ததால் பால்கோவா உற்பத்தியும் இருமடங்காகி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவரது நினைவிற்கு வருவது ஆண்டாள் கோவில். அதற்கு அடுத்தபடியாக நினைவில் இருப்பது பால்கோவா ஆகும். அந்த அளவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரபலமானது. சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அடையாளம் பால்கோவா என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த பால்கோவா தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 1000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சமீபத்தில் இந்த பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் விற்பனையும் அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு இந்த பகுதியில் 5 ஆயிரம் கிலோ வரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது உற்பத்தி இரு மடங்காக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக பால்கோவா விலையை திடீரென்று உயர்த்தி விட்டனர். 1 கிலோ பால்கோவா ரூ.240-க்கு விற்கப்பட்ட நிலையில் கிலோவிற்கு ரூ.20 உயர்ந்து, ரூ.260-க்கு விற்கப்படுகிறது.

Next Story