மாவட்ட செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல் + "||" + Cauvery for Aravacurichi block Rs.250 crore allocated for drinking water project

அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்

அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்
அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
க.பரமத்தி,

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று, சின்னமுத்தூர் பகுதியில் உள்ள முத்தூர் அணையையும், கார்வழி ஊராட்சியில் உள்ள ஆத்துப்பாளையம் அணையையும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் துக்காச்சி ஊராட்சியில் நடுப்பாளையம் முதல் ஆவுத்திப்பாளையம் வரையில் உள்ள வாய்க்கால் தூர்வாரும் பணியையும், கரூர் ஊராட்சி ஒன்றியம் மூலிமங்கலத்தில் நொய்யல் ஒரத்துப்பாளையம் வாய்க்கால் தூர்வாரும் பணியினையும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டர் அன்பழகன், கீதா எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் சென்றனர்.


பாசன வசதிபெறும்

இதைத்தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறும்போது, அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது. பொதுப்பணித்துறையின் சார்பில் கீழ்பவானி ஆற்றில் இருந்து வரும் நீரானது அஞ்சூர் வாய்க்கால் வழியாக கடைமடை சென்றடைகின்றது. இதன் நீளம் சுமார் 3 கிலோ மீட்டராகும். இந்த வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளும், கரைகள் பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 775 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பாக ஓலப்பாளையம் பிரிவு முதல் பழமாபுரம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகின்றது என்றார்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, பொதுப்பணித்துறை நொய்யல் வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் முருகானந்தம், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், புஞ்சை புகளூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சரவணன், காகிதபுரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சதாசிவம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையின் செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர்கள் பட்டாபிராமன், தங்கராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு அமைச்சர் பேட்டி
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
2. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
3. 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
4. அரசு விதிகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை அமைச்சர் தங்கமணி பேட்டி
அரசு விதிமுறைகளை மீறும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
5. மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது அமைச்சர் பேட்டி
கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.