மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை + "||" + Voter list verification: Collector's consultation with political parties

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடர்பாக அரசியல் கட்சியினருடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகள் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.


கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி குமரி மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெறும். வாகன ஓட்டுனர்் உரிமம், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, உழவர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அரசு அடையாள அட்டை, பான் கார்டு, விண்ணப்பதாரர் அல்லது அவரின் உறவினர்் பெயரில் உள்ள குடிநீர்், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பு கட்டண ரசீதுகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை அளித்து வாக்காளர் பதிவு விவரங்களை உறுதி செய்யலாம்.

மேலும் வாக்காளர் உதவி மைய செல்போன் செயலி, பொது சேவை மையம் மூலமாக வாக்காளர் பதிவினை சரிபார்க்கலாம். பூர்த்்தி செய்த விண்ணப்பத்தை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மூலமாகவும் தாக்கல் செய்ய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

தொலைபேசி எண்

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் போது ஒரே மாதிரியான பதிவுகள், தவறுகள், புகைப்படங்களின் தரங்கள், பதிவு செய்யப்படாத தகுதியான வாக்காளரின் விவரங்கள், மரணமடைந்த வாக்காளர் விவரம், இடம் மாறி சென்ற வாக்காளர்கள் விவரம் போன்றவை சரி செய்யப்படும்.

மேலும் வாக்காளர் பட்டியல் மறு வடிவமைப்பு, தரப்படுத்துதல், வாக்குச்சாவடியின் வசதிகள் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் செய்தல், நகல் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் வழங்குதல், ஆய்வு செய்தல் மற்றும் விண்ணப்பங்கள் திரும்ப பெறும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் 1950 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வீடு, வீடாக சரிபார்ப்பு

அதோடு வாக்காளர் விவரங்களை சரிபார்த்து கொள்ள பொது சேவை மையங்களும் (சி.எஸ்.சி.) அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றையும் வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்துதல் போன்றவற்றுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம். இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் ஜெயகோபால், தி.மு.க.வை சேர்ந்த லீனஸ்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
2. அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
3. கிரு‌‌ஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட கூட்டம்
கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட கூட்டத்தில் முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் கலந்து கொண்டார்.
4. மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
5. கொசுக்கள் உற்பத்தியாகும் பொருட்களை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கரூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கரூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 225 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.