மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண் + "||" + Tuticorin double murder case: Plaintiff Charan at Court in Nagercoil

தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண்

தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண்
தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் நாகர்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
நாகர்கோவில்,

தூத்துக்குடி மாவட்டம் சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கப்பல் என்ஜினீயர். கடந்த 15-ந் தேதி முருகேசன் தனது தெருவில் நின்றபோது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக சென்றுள்ளார்.


இதை முருகேசன் தட்டி கேட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகேசனும், அவருடைய நண்பர் விவேக் என்பவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி முனுசாமிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து மணிகண்டனை வருகிற 19-ந் தேதிக்குள் (அதாவது நாளை) தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி கிறிஸ்டியன் உத்தரவிட்டார். அதுவரையிலும் மணிகண்டனை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்கும்படியும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது
கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
2. வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதிநிறுவன அதிபர் -மனைவியின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை; அக்காள் உள்பட 2 பேர் கைது
வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர், அவருடைய மனைவி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக நிதி நிறுவன அதிபரின் அக்காள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. திருவெண்ணெய்நல்லூர் அருகே, செல்போன் கடை ஊழியர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே செல்போன் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஆவடி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது; முன்விரோதம் காரணமாக நண்பர்கள் கொன்றார்களா? என விசாரணை
ஆவடி அருகே அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர்அடையாளம் காணப்பட்டார். முன்விரோதம் காரணமாக நண்பர்களே அழைத்து சென்று கொலை செய்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. ரவுடியின் உறவினர் வெட்டிக்கொலை; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
காஞ்சீபுரத்தில் பிரபல ரவுடியின் உறவினர் சரமாரியாக கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.