மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல் மயங்கி விழுந்து சாவு + "||" + Lawyer in Kodaikanal court arguing fainted and dies

கொடைக்கானலில் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல் மயங்கி விழுந்து சாவு

கொடைக்கானலில் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல் மயங்கி விழுந்து சாவு
கொடைக்கானலில் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல் மயங்கி விழுந்து சாவு.
கொடைக்கானல்,

திண்டுக்கல் நகர் சாலைரோட்டை சேர்ந்தவர் ரகுபதி (வயது 82). வக்கீலான இவர், ஒரு வழக்கு விஷயமாக நேற்று பகல் 12.30 மணியவில் கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வக்கீல்கள் அவரை காரில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதனையடுத்து வக்கீல்கள், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவரது மகள் பீனா (45) கொடைக்கானலுக்கு வந்தார். பின்னர் அவர் தனது தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனு அளித்தார். இதையடுத்து அவருடைய சாவில் சந்தேகம் இல்லாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுபதியின் உடலை மகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹிட்லர் வளர்த்த முதலை சாவு
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.
3. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: தீக்காயமடைந்த தொழிலாளி சாவு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீப் பிடித்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
4. கோவையில் பரிதாபம் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு மேலும் 2 பேருக்கு சிகிச்சை
கோவையில் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.