சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில்: முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நீதிமன்ற காவல் ஜாமீன் மனு மீது - இன்று விசாரணை
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அக்டோபர் 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட்டு உத்தர விட்டது. அவருடைய ஜாமீன் மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரணை நடக்கிறது.
பெங்களூரு,
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக் குமாரை அமலாக்கத் துறையினர் கடந்த 3-ந் தேதி கைது செய்து, 4-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
அமலாக்கத்துறை யினர் கேட்டுக் கொண்டதை அடுத்து டி.கே.சிவக்குமாரை 9 நாட்கள் அதாவது 13-ந் தேதி வரை அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்பி கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் பிறகு கடந்த 13-ந் தேதி டி.கே.சிவக் குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அமலாக்கத் துறையினர், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்குமாறு கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட டெல்லி சிறப்பு கோர்ட்டு, டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட அமலாக்கத்துறையின் காவலை மேலும் 4 நாட்கள் 17-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் நேற்று டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் வாதிடுகையில் கூறியதாவது:-
டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நிறைவு செய்துவிட்டோம். கோர்ட்டு உத்தரவுப்படி அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் எந்த குறையும் வைக்கவில்லை. அவரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கினால், ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எக்காரணம் கொண்டும் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து தவறு செய்துள்ளனர். எந்த ஆவணங்களும் இன்றி டி.கே.சிவக்குமார் ரூ.200 கோடி பரிமாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அவர் சரியான பதிலை கூறவில்லை. டி.கே.சிவக்குமார் குடும்பத்தினர் 20 வங்கிகளில் 317 வங்கி கணக்குகளை வைத்துள்ளனர்.
இந்த முழு விவரங்களை இங்கே வழங்க, வழக்கு விசாரணை ஒன்றும் இங்கு நடக்கவில்லை. டி.கே.சிவக்குமாரின் 23 வயது மகள் ரூ.108 கோடி அளவுக்கு பரிமாற்றம் செய்துள்ளார். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு நடராஜ் வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், “டி.கே.சிவக்குமார் எந்த தவறும் செய்யவில்லை. அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.8.59 கோடி சிக்கியதாக அமலாக்கத்துறையினர் பொய் சொல்கிறார்கள். அவரது வீட்டில் ரூ.41 லட்சம் மட்டுமே கிடைத்தது. அதுவும் தனது பணம் தான் என்று டி.கே.சிவக்குமார் கூறிவிட்டார். விசாரணை முடிந்துவிட்டதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணை முடிந்துவிட்டதால் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. டி.கே.சிவக்குமாருக்கு உடல்நிலை சரி இல்லை. இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்புக்கு அருகில் வந்து நின்றுள்ளார். விசாரணை அதிகாரிகள் அவருக்கு தேவை இல்லாமல் தொல்லை கொடுக் கிறார்கள். எந்த நிபந்தனை வேண்டுமானாலும் விதித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஜாமீன் வழங்குங்கள்” என்றார்.
இன்னொரு மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி வாதிடும்போது, “டி.கே.சிவக்குமார் கர்நாடகத்தில் முக்கியமான ஒரு கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையினர் தொல்லை கொடுக்கிறார்கள். இது ஒன்றும் கொலை வழக்கு அல்ல. இந்த வழக்கில் ஆதாரங்களை அழிக்க முடியாது. இது குற்றம்சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்கக்கூடிய வழக்கு தான். அதனால் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்“ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹார், பின்னர் டி.கே.சிவக் குமாரை அக்டோபர் 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதே நேரத்தில் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் என்றும், மருத்துவ பரிசோதனையில் அவரை ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை(அதாவது இன்று) நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
மருத்துவ பரிசோதனையில் டி.கே.சிவக்குமாருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது தெரிய வந்தால், அவரை டெல்லி திகார் சிறை சூப்பிரண்டு வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டார் சிறை சூப்பிரண்டு பாதுகாப்புடன் அவருக்க சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story