அ.ம.மு.க. பாதி அழிந்து விட்டது - புகழேந்தி பேட்டி


அ.ம.மு.க. பாதி அழிந்து விட்டது - புகழேந்தி பேட்டி
x
தினத்தந்தி 18 Sept 2019 4:30 AM IST (Updated: 18 Sept 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க.பாதி அழிந்து விட்டது என்று கோவையில் புகழேந்தி கூறினார். கோவையில் அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை,

பெரியார் பிறந்தநாளையொட்டி கோவைகாந்திபுரத்தில்உள்ள அவருடைய சிலைக்குஅ.ம.மு.க.முன்னாள் செய்திதொடர்பாளர்புகழேந்திமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.ம.மு.க.சார்பில் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டசெய்தி தொடர்பாளர்கள்பட்டியலில் எனது பெயர் விடுபட்டு இருந்தது. இதில்டி.டி.வி. தினகரன்நீக்கிவிட்டேன் என்று சொல்லவில்லை. இந்தஅறிவிப்பு சசிகலாவின்ஒப்புதலின் படி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுதான் பெரியதாக உள்ளது. இதை நான்உங்களுக்கு சொல்லியேஆக வேண்டும்.

எனது பெயர் இடம்பெறவில்லை என்ற செய்தி பெரியதாகி உள்ளது. அதற்குடி.டி.வி. தினகரனும்பதில் அளிக்கவில்லை. கோவைமாவட்ட செயலாளர்தவறான தகவல் அளித்ததால் தான் அ.ம.மு.க.நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டனர். இதில் அநீதி ஏற்பட்டு உள்ளது. இது தவறான முடிவு ஆகும். அவர்கள் பாதிக்கப்பட்டதால் தான் நான்குரல்கொடுத்தேன். ஆகவே அதற்காக எனக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு இங்கு இருக்க கூடிய தொண்டர்கள் தான் முக்கியம்.

செய்திதொடர்பாளர்பட்டியலில் பெயர் இடம்பெறவில்லைஎன்பது குறித்துடி.டி.வி. தினகரன்என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த சசிகலாவை நானும்,டி.டி.வி. தினகரனும்சந்தித்துபேசினோம். அப்போது கூட இதுகுறித்து அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் மீது அதிருப்தி எதுவும் இல்லை.

அ.ம.மு.க.தொண்டர்கள் கொத்துகொத்தாககட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட செயலாளர்கள்தோற்றுப்போய்விட்டனர்.மண்டல பொறுப்பாளர்களால்தான்அ.ம.மு.க.பாதி அழிந்து விட்டது. நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியைடி.டி.வி. தினகரன்சரி செய்யாததுவருத்தமளிக்கிறது. நான்வேறு கட்சியில்இணைவது குறித்துமுடிவு எடுக்கவில்லை. அ.ம.மு.க. நான் ஆரம்பித்த கட்சி என்று ஆதங்கத்தில் கூறினேன்.

கட்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தயார். சசிகலாவுக்கு ஆதரவாக முதன்முதலாக குரல்கொடுத்தது நான் தான். நான் மேடையில் பேசும்போதுவெற்றிவேல், பழனியப்பன் எல்லாம் எங்கு இருந்தார்கள் என்று தெரியவில்லை. வருகிற நவம்பர் மாதம்உள்ளாட்சி தேர்தல்நடக்க வாய்ப்பு உள்ளது. அதில் களம் காண்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story