தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி கோலப்போட்டி-பாரம்பரிய உணவு கண்காட்சி


தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி கோலப்போட்டி-பாரம்பரிய உணவு கண்காட்சி
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 9:40 PM GMT)

தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்,

தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. சமையல் போட்டி, கோலப்போட்டி, போட்டி நடத்தப்பட்டது. மேலும் பாரம்பரிய உணவு கண்காட்சி நடந்தது. நவதானியங்களால் பெண்கள் கோலம் போட்டனர். திட்ட அலுவலர் கவிதா தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். பல்வேறு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் உதவி திட்ட அலுவலர்கள் தேவி, கீதா மற்றும் கலந்து கொண்டனர்.

Next Story