பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை உடனடியாக மீட்டுக் கொடுத்த போலீசார்; போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
திருக்கனூரில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை கண்காணிப்பு கேமரா உதவியால் போலீசார் உடனடியாக மீட்டுக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து போலீசாரை மேற்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் பாராட்டினார்.
திருக்கனூர்,
திருக்கனூர் புது நகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 40) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உமா தேவி (வயது 37). இவர் நேற்று திருவக்கரை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலையில் திருக்கனூருக்கு திரும்பி வந்தார். திருக்கனூர் பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி ஒரு கையில் பையையும், மற்றொரு கையில் மணிபர்சையும் வைத்துக் கொண்டு நடந்து சென்றார்.
திருக்கனூர் சரஸ்வதி நகர் இந்தியன் வங்கி எதிரில் வந்தபோது, கை வலி ஏற்பட்டதால், மணிபர்சை அருகில் இருந்த ஸ்கூட்டரில் வைத்துவிட்டு பையை மற்றொரு கைக்கு மாற்றினார். பின்னர் ஸ்கூட்டர் மீது வைத்த மணிபர்சை எடுக்க மறந்து வீட்டுக்கு சென்று விட்டார். அந்த மணிபர்சில் 5 பவுன் நகையும், ஒரு செல் போனும் இருந்தது.
வீட்டுக்கு சென்றுபார்த்த போது, மணிபர்சை காணாததால் உடனடியாக அப்பகுதிக்கு வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. அவருடைய மணிபர்சும் இல்லை. அதனால் பதறிப்போன உமாதேவி திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வேலு, தலைமை பீட் போலீசார் பரசு ராமன், தெய்வசிகாமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அருகில் இருந்த தி.மு.க. பிரமுகர் செந்தில் வேலன் என்பவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அங்கு நின்றிருந்த ஸ்கூட்டர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கோதைநாயகி என்ற பெண்ணின் வண்டி என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீசார் கோதை நாயகியிடம் விசாரணை நடத்தினர்.
அதில் திருக்கனூர் பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற சென்றுவிட்டு திரும்பும்போது இந்தியன் வங்கி அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் வண்டியை நிறுத்திவிட்டு ஜெராக்ஸ் எடுக்க சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட் டரின் மேல் ஒரு பர்ஸ் இருந்ததாகவும் யாருடையது என தெரியாததால் அதை எடுத்து வந்ததாகவும் கூறினார். கோதைநாயகி வைத்திருந்த பர்சில் ஐந்து பவுன் நகையும், செல்போனும் பத்திரமாக இருந்தது. அதனை போலீசார் மீட்டனர்.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கண்காணிப்பு கேமரா உதவியால் ஐந்து பவுன் நகை மீட்கப்பட்டது குறித்து அறிந்த மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் திருக்கனூர் போலீசாரை வில்லியனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். மணிபர்சை தொலைத்த உமா தேவியிடம் 5 பவுன் நகை மற்றும் செல்போனையும் ஒப்படைத்தார். நகையை கண்டுபிடிக்க உதவிய தி.மு.க. பிரமுகர் திருக்கனூர் செந்தில் வேலனையும் அவர் பாராட்டினார்.

Related Tags :
Next Story