சேலம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


சேலம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 11:31 PM GMT)

சேலம் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்

சேலம், 

சேலம் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன், லலிதா, ராஜராஜேஸ்வரி வினோத் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான காஞ்சீபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான மென் பட்டு புடவைகள் புதிய வடிவமைப்புகளில் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகளும், ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகளும் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் இங்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபிள் மேட், ஸ்கிரீன் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் ஆகியவை வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 4 விற்பனை நிலையங்களுக்கு ரூ.5 கோடியே 80 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story