நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்; கணவன், மனைவி பலி
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்கள்.
தாம்பரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அவளபிள்ளை பகுதியை சேர்ந்தவர் குடவின்ராஜ்குமார் (வயது 55), ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சொப்னா செல்வகுமாரி (50). இவர்களது மகன் ஜஸ்வந்த். சென்னை அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
மகன் ஜஸ்வந்தை பார்ப்பதற்கும், தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும் ஓசூரில் இருந்து குடவின்ராஜ்குமார், சொப்னா செல்வ குமாரி இருவரும் நேற்று முன்தினம் இரவு ஓசூரில் இருந்து காரில் வந்தனர்.
கார் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நாவலூர் பகுதியில் செல்லும்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் வந்த குடவின்ராஜ்குமார், சொப்னா செல்வகுமாரி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்கள் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story