வன்கொடுமை தடுப்பு குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது


வன்கொடுமை தடுப்பு குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 18 Sept 2019 11:31 PM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வன்கொடுமை தடுப்பு விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016-ன்படி மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடை பெற்றது.

இந்த கூட்டத்தில் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள் இந்த சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்தும், இந்த சட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்கள், அமைப்புகளின் பங்கு மற்றும் பணியின் செயல்பாடுகள் குறித்தும், மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் செயல்படுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்படி சட்டப்பிரிவின் கீழ் பதியப்படும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தனிக்கவனம் செலுத்தி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சாதிச்சான்றுகளை விரைந்து வழங்க ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார்களுக்கும், வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கும், அரசு வக்கீல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story