சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.2½ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.2½ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.2½ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. விழாவில் 63 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 15 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித் தொகை, சமூக நலத்துறை மூலம் இலவச தையல் எந்திர திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.43 ஆயிரத்து 400 மதிப்பிலான தையல் எந்திரங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு நேரடி கடன் மற்றும் விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து ஆயிரத்து 984 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார். முன்னதாக தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஊட்டச்சத்து உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், தாசில்தார்கள் பாரதிவளவன், செல்வராஜ் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் சாந்தா மேலப்புலியூரில் உள்ள ரே‌‌ஷன் கடை, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படும் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் கேட்டறிந்தார்.


Next Story