வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை ஒரு தலைக்காதலால் விபரீதம்


வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை ஒரு தலைக்காதலால் விபரீதம்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:30 AM IST (Updated: 19 Sept 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவர் வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கோவளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பிளாசியூஸ் கங்கன். இவருடைய மகன் ஆரோக்கிய லில்லீஸ் (வயது 19). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஆரோக்கிய லில்லீஸ் தினமும் கல்லூரிக்கு செல்லும் போது, அப்பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆரோக்கிய லில்லீஸ் மனம் உடைந்து காணப்பட்டார்.

வகுப்பறையில் தற்கொலை

நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற ஆரோக்கிய லில்லீஸ், வகுப்பறையில் திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆரோக்கிய லில்லீசை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஆரோக்கிய லில்லீஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஒரு தலைக்காதலால் வகுப்பறையில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story