குஜிலியம்பாறையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


குஜிலியம்பாறையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் குஜிலியம்பாறையில் நடந்தது.

குஜிலியம்பாறை,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் குஜிலியம்பாறையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விவசாய தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய தலைவர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story