அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

திருப்பத்தூர்,

அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பத்தூர் சீரணி அரங்கத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். ஆவின் சேர்மன் அசோகன், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய தலைவர் கரு.சிதம்பரம், முன்னாள் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, நகர செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

வறட்சி பகுதியாகவும், பின்தங்கிய பகுதியாகவும் இருக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கு தொழில்துறை நிறுவனங்கள் வருவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்து வருகிறார். மக்களின் குறைகள் எதுவானாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு தயாராக உள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல், ஆலோசனைப்படி படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் அன்பழகன், கணேசன் ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய துணை செயலாளர் முருகேசன் புதுத்தெரு முருகேசன், முத்துகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்புவனத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இளையான்குடி ஒன்றிய செயலாளர் பாரதிராஜன், பேரூர் கழக செயலாளர்கள் நாகரத்தினம், விஜிபோஸ், அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி செயலாளர் நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், தலைமை கழக பேச்சாளர் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உள்பட பலர் பேசினர். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் அழகுமலை, இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் திருப்புவனம் பகுதியில் அதிக வாக்குகள் பெற்றுக்கொடுத்த ஒன்றிய செயலாளர் கணேசனுக்கு அமைச்சர் பாஸ்கரன் பரிசு வழங்கினார். நெல்முடிக்கரை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார்.

Next Story