செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி வெங்கனூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி வெங்கனூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், வெங்கனூர் கிராமத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் எந்தவித ஒப்புதலும் பெறாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. செல்போன் கோபுரம் அமைத்தால் பாதிப்பு ஏற்படும் என்று, அந்த பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் தற்போது அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மிரட்டினார்
ஒப்புதல் பெற்றதற்கான அனுமதி நகலை அந்த தனியார் நிறுவனத்திடம் கேட்டதற்கு, அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் சென்று பெற்று கொள்ளுங்கள். மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினால், உங்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்று மிரட்டினார். எனவே மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை தடுத்து நிறுத்தி, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Tags :
Next Story