காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 40 பேர் மீது போலீசார் வழக்கு


காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 40 பேர் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 20 Sept 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 40 பேர் மீது போலீசார் வழக்கு.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை விமர்சித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மனோகரன், நகர தலைவர் ஜாக்சன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் விஜய்ஆண்டனி, மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story