வேலை நிறுத்த போராட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை


வேலை நிறுத்த போராட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 20 Sept 2019 4:00 AM IST (Updated: 20 Sept 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

வேலை நிறுத்த போராட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை.

அரியலூர்,

சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. ஒரு சில லாரிகள் இயங்கின. பெரம்பலூர் நகரில் ஆங்காங்கே சாலையோரங்களில், தேசிய நெடுஞ்சாலையோரங்களில், பெட்ரோல் பங்கில், லாரி பார்க்கிங் ஆகிய இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறுகையில், கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தினால் லட்சக்கணக்கில் வர்த்தக பாதிப்பு ஏற்படும். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கட்டுமான பொருட்கள், காய்கறிகள், மோட்டார் உதிரிபாகங்கள் தேக்கம் அடைந்தன.


Next Story