மாவட்ட செய்திகள்

அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி திடீர் சாவு + "||" + Sudden death of a grandmother who protested against the measurement of the occupation area near Aravakurichi

அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி திடீர் சாவு

அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி திடீர் சாவு
அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி திடீரென இறந்தார்.
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தில் உள்ள ரெங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 80). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சசிக்குமார். இவர்கள் இருவரது வீட்டின் அருகே உள்ள நடைபாதையை செல்லம்மாள் ஆக்கிரமித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகுமார், செல்லம்மாளிடம் முறையிட்டும் ஆக்கிரமிப்பை விலக்கி கொள்ளவில்லை. இதனால் சசிகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் தனது இடத்தை அளவீடு செய்து தருமாறு மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சசிகுமாரின் வீட்டை அளவீடு செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மூதாட்டி சாவு

இதையடுத்து வேலம்பாடி கிராமத்திற்கான கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் ஆகியோர் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்லம்மாள் தொடர்ந்து கூச்சலிட்டார். அப்போது திடீரென மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே செல்லம்மாள் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதனால் இடத்தை அளவிடும் பணியை பாதி யிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். பின்னர் செல்லம்மாளின் உடலை அவரது உறவினர்கள் எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஹிட்லர் வளர்த்த முதலை சாவு
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.
3. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: தீக்காயமடைந்த தொழிலாளி சாவு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீப் பிடித்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
4. கோவையில் பரிதாபம் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு மேலும் 2 பேருக்கு சிகிச்சை
கோவையில் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.