மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு கோழிக்கழிவுகளுடன் சென்ற டெம்போவை பொதுமக்கள் மடக்கினர் டிரைவருக்கு தர்மஅடி
இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, கோழிக்கழிவுகளுடன் நிற்காமல் சென்ற டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்து டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இரணியல்,
நாகர்கோவிலில் இருந்து ஒரு டெம்போ புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தது. இரணியல் அருகே நுள்ளிவிளை ரெயில்வே பாலம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதைகண்ட அப்பகுதி வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனத்தில் விரட்டி சென்று டெம்போவை மடக்கி பிடித்து டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர், டெம்போவை பார்த்தபோது, அதில் கோழிக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது. உடனே, இதுபற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த குளச்சல் போலீசார், டிரைவரை மீட்டு விசாரணை நடத்தினர்.
மீண்டும் விபத்து
விசாரணையில், கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை டெம்போவில் ஏற்றிக்கொண்டு புதுக்கடை வழியாக வந்தபோது, ஏற்கனவே ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் சென்றதும், டெம்போ பதிவு எண்ணை வைத்து புதுக்கடை போலீசார் டெம்போவை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்படி கூறினர். அதன்படி டெம்போவை புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரும்போது மீண்டும் விபத்தில் சிக்கி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து குளச்சல் போலீசார், புதுக்கடை போலீசாரிடம் தகவல் கேட்டு விட்டு டெம்போவை புதுக்டைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றதும் புதுக்கடை போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த குமார்(வயது 28) என்பதும், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதேபோல் கோழிக்கழிகளை ஏற்றிவந்த மற்றோரு டெம்போவையும் புதுக்கடை போலீசார் பறிமுதல் செய்து நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்த ராஜபொன்(34) என்பவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story