மோட்டார் சைக்கிள் விபத்தில் தீயணைப்பு படை வீரர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் தீயணைப்பு படை வீரர் சாவு
x
தினத்தந்தி 20 Sept 2019 3:15 AM IST (Updated: 20 Sept 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

புதியம்புத்தூர் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் தீயணைப்பு படை வீரர் பரிதாபமாக இறந்தார்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. காலனியை சேர்ந்தவர் அழகர். இவருடைய மகன் மகேந்திரன்(வயது 22). இவர் ஓட்டப்பிடாரத்தில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலையில் தூத்துக்குடிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் புதூர்பாண்டியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, முன்னால் ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது மகேந்திரனின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் லேசாக உரசியதாக தெரிகிறது.

இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேனியஸ் ஜேசுபாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story