சங்ககிரி மலைக்கோட்டையில் பாரம்பரிய சின்னங்களை கலெக்டர் பார்வையிட்டார்


சங்ககிரி மலைக்கோட்டையில் பாரம்பரிய சின்னங்களை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 20 Sept 2019 4:00 AM IST (Updated: 20 Sept 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி மலைக்கோட்டையில் பாரம்பரிய சின்னங்களை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டார்.

சங்ககிரி, 

உலக சுற்றுலா தினம் சேலம் மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில் பாரம்பரிய சின்னங்களை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.

பின்னர் இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-

இந்த ஆண்டு உலக சுற்றுலா தினம் மாநில அளவில் சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களை பராமரிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளும் நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற அனைத்து சங்கங்களும் சுற்றுலா துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றன.

இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

மேலும் அங்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம் , தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story