மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு - 3 பேர் படுகாயம்


மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு - 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Sept 2019 3:30 AM IST (Updated: 20 Sept 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

சென்னை தேனாம்பேட்டை பச்சமூர்த்தி நகரை சேர்ந்தவர் தனுஷ் (வயது 18). இவரும், அவரது உறவினர்களான மணிகண்டன், கவிதா, மாயாவதி உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி வந்திருந்தனர். சம்பவத்தன்று அவர்கள் ஒரு மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். சுங்கச்சாவடி அருகில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான. இதில், மோட்டார்சைக்கிளில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன், கவிதா, மாயாவதி உள்ளிட்ட 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story