‘மராத்தி பேச தெரிந்தவர்களுக்கு மட்டும் வாடகை வீடு கொடுங்கள்' நவநிர்மாண் சேனா பேனரால் பரபரப்பு
‘மராத்தி பேச தெரிந்தவர்களுக்கு மட்டும் வீட்டை வாடகைக்கு கொடுங்கள்' என நவநிர்மாண் சேனாவினர் வைத்து உள்ள பேனர் தானேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தானே,
ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி ‘மண்ணின் மைந்தர்கள்' கோட்பாட்டின் படி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மும்பையை அடுத்த தானே நகரில் நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்தி பேச தெரிந்தவர்களுக்கு மட்டுமே வீடுகளை வாடகைக்கு விட வேண்டும் அல்லது விற்பனை செய்ய வேண்டும் என பேனர்கள் வைத்து உள்ளனர்.
நவநிர்மாண் சேனா நிர்வாகி அபிஜித் பன்சே, தானே மற்றும் பால்கர் மாவட்ட தலைவர் அவினாஸ் ஆகியோரது பெயரில் வைக்கப்பட்டு உள்ள அந்த பேனர்களில் ‘ஆப்லா தானே - மராத்தி தானே' (நமது தானே - மராத்தி தானே) என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது.
பரபரப்பு
நவநிர்மாண் சேனாவினர் வைத்து உள்ள இந்த பேனர்கள் தானேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தானேயை சேர்ந்த அந்தகட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், ‘தானேயில், மராத்தி பேச தெரிந்தவர்கள் வீடுகளை வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வாங்குவது என்பது சிரமமாக மாறி வருவதாக கட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எனவே தான் நவநிர்மாண் சேனா சார்பில் இந்த அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது’ என்றார்.
Related Tags :
Next Story