மானியத்தில் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
மானியத்தில் இருசக்கர வாகன பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் பணிபுரியும் 8-ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு உட்பட்ட ஏழை பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் 2017-18-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 2019-20-ம் நிதியாண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் இலக்கீடு நிர்ணயம் செய்து வரப்பெற்றுள்ளது. தங்களது குடும்பத்திற்கு பொருள் ஈட்டுவதற்காக நீண்டதூரம் பயணம் செய்து பணிபுரியும் மகளிர் இத்திட்டத்திற்கான முதன்மை பயனாளிகள் ஆவர். மேலும் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளர்களாக தங்களை பதிவு செய்துள்ள பெண்கள், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுயதொழில், சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக நிறுவனங்களான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பு ஊதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் பெண்கள் தகுதியுடைய பயனாளிகள் ஆவர்.
விண்ணப்பிக்கும் பயனாளிகளில் ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனுடைய மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், பழங்குடியினர் மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்கள் புதிதாக வாங்கும் மகளிருக்கான இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
வாகனம் வங்கி கடன் மூலம் வாங்கப்பட்டால் மானியத்தொகை பயனாளிகளின் வாகன கடன் கணக்கிற்கு வங்கி மூலம் விடுவிக்கப்படும். வாங்கும் வாகனம் 1.1.2018-ந்தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், வாங்கப்படும் வாகனம் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் வட்டார போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும். இருசக்கர வாகனமானது புதிய கியர்லெஸ், ஆட்டோ கியர் வகையாகவும் இருப்பது அவசியம்.
உரிய சான்றுகளுடன் விண்ணப்பத்தால் அதை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மாவட்ட அளவிலான பரிசீலனைக்குழு ஆய்வு செய்து தகுதியுள்ளவர்களுக்கு மானியம் விடுவிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது, முகவரி, ஓட்டுனர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story