பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை விமானப்படை அதிகாரிகளின் மகன்கள் கடத்தப்பட்டார்களா? போலீசார் விசாரணை


பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை விமானப்படை அதிகாரிகளின் மகன்கள் கடத்தப்பட்டார்களா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Sept 2019 4:00 AM IST (Updated: 21 Sept 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூலூர்,

கோவையை அடுத்த சூலூர்விமானப்படை தளத்தில்அதிகாரிகளாக பணியாற்றிவருபவர்கள் விவேக் சிங் மற்றும் பல்தேவ். நண்பர்களான இவர்கள் இருவரும் குடும்பத்துடன் சூலூர்விமான தளவிடுதியின் அருகே உள்ள வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பல்தேவ் மற்றும் விவேக் சிங் ஆகிய இருவருக்கும் 14 வயதில் மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சூலூர் அருகேஉள்ள தனியார்பள்ளியில்9-ம்வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் காலை 2 பேரும்பள்ளிக்கு செல்வதாக கூறிக்கொண்டுதங்களது சைக்கிளில் வீட்டைவிட்டு கிளம்பிஉள்ளனர்.

இதற்கிடையே பல்தேவின் வீட்டில் இருந்தரூ.4 ஆயிரம் மற்றும்உடமைகளை காணவில்லை. இதனால்சந்தேகமடைந்தஅவர் தனது மகன்எடுத்து சென்றுஇருக்கலாம் என்று அவன் படிக்கும்பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் அவரது மகன் அன்றைய தினம் பள்ளிக்கு வரவில்லைஎன கூறிஉள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அவரது சக நண்பரும், அதிகாரியுமான விவேக்சிங்கிற்கு தெரிவித்துஉள்ளார்.இந்தநிலையில்விவேக் சிங்கின் மகனும் பள்ளிக்கும் செல்லவில்லை, வீட்டுக்கும் திரும்பவில்லைஎன்பது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரும் சூலூர் பகுதிகளில் தங்களதுமகன்களை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று முன்தினம் இரவு இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானசிறுவர்களை தேடிவருகிறார்கள். அத்துடன் அவர்கள் எங்கு சென்றார்கள். பணத்துக்காக இருவரும் கடத்தப்பட்டார்களா? என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவர்களின் நண்பர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்அந்த சிறுவர்கள்காங்கேயம்பாளையம்மற்றும் சூலூர் பகுதியில்உள்ள சைக்கிள்கடைகளுக்கு சென்று சைக்கிள் செயினைசரி செய்துவிட்டுசென்றது தெரியவந்தது.

பள்ளிக்கு செல்வதாக கூறி சைக்கிளில்வெளியே சென்ற விமானப்படை அதிகாரிகளின் மகன்கள் மாயமான சம்பவம்அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story