திருப்பத்தூரில் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


திருப்பத்தூரில் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூரில் பிரதான சாலை கிருஷ்ணகிரி - வாணியம்பாடி மெயின்ரோடு. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த தார்சாலை பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக போடப்பட்டது.

இந்த தார் சாலையில் பல இடங்களில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த பள்ளங்களில் இறங்கி விபத்துக்குள்ளாகிறது. மேலும் தற்போது தொடர் மழையால் பள்ளங்களில் மழைநீர் நிரம்பி வழிகிறது. இதனால் இரவு நேரங்களில் பள்ளங்களில் வாகனங்கள் இறங்கி விபத்துக்குள்ளாகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வாணியம்பாடி - அரூர் வரை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, எங்களால் தற்போது பள்ளங்களை சரி செய்ய முடியாது என்றனர்.

சில இடங்களில் பள்ளத்தில் மண் கொட்டி உள்ளார்கள். தற்போது மழை காரணமாக பள்ளத்தில் இறங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினால் மட்டும் போதாது, இதுபோன்ற சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story