அரியலூரில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரி ஆய்வு


அரியலூரில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 22 Sept 2019 4:15 AM IST (Updated: 22 Sept 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் தலைமை பொறியாளர் முருகேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள், அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு மற்றும் கடலூர் மாவட்டம் பென்னாடம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் தலைமை பொறியாளர் முருகேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் பெரம்பலூர் புறவழிச்சாலை பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகா‌‌ஷ், திருச்சி திட்டங்களின் கோட்ட பொறியாளர்கள் ‌ஷாபுதீன், வேல்ராஜ், உதவி கோட்ட பொறியாளர்கள், தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

Next Story