பள்ளங்குண்டு ஊருணி ஆக்கிரமிப்பு; அளவிடும் பணி தொடக்கம்
பள்ளங்குண்டு ஊருணி ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அளவிடும் பணி தொடங்கியது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ளது பள்ளங்குண்டு ஊருணி. இங்கு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவுப்படி அதிரடியாக தூர் வாரப்பட்டது. மேலும் ஊருணியை சுற்றிலும் ஆக்கிரமிப்பு உள்ளதாக அறியப்பட்டதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி, சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம் தலைமையில் ஊருணி பகுதியில் உள்ள கட்டிடங்களை அளவு செய்யும் பணி தொடங்கியது.
முன்னதாக கோட்டாட்சியர் சங்கரநாராயணன் கூறுகையில், கலெக்டரின் உத்தரவின் பேரில் பள்ளங்குண்டு ஊருணியை ஆய்வு செய்யும் போது, அங்கு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருந்தால், அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.
அதைத்தொடர்ந்து உடனடியாக நேற்று பள்ளங்குண்டு ஊருணியை சுற்றிலும் அளவு எடுக்கும் பணியை வருவாய் அலுவலர் சாந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட வருவாய்துறை அலுவலர்கள் தொடங்கினர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், தற்போதைய கலெக்டர் நீர்நிலையை பராமரித்து நீரை சேகரிக்க, கண்மாய்கள் மற்றும் ஊருணிகளை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அவருக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் பள்ளங்குண்டு ஊருணியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் கடைகள் அகற்றப்பட வேண்டும். பள்ளங்குண்டு ஊருணி சுத்தப்படுத்தி அதில் நீரை தேக்கி வைக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றனர்.

Related Tags :
Next Story